தீயணைக்கப்பட்ட பின் ரயில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.
Dhubulia: மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நேற்று பயணிகள் ரயில் ஒன்றில் இரு பெட்டிகளில் தீப்பிடித்தது, இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சியால்தாவிற்கு செல்லும் லால்கோலா பயணிகள் ரயில், துபுலியா ரயில் நிலையத்தை அடைந்தபோது பெண்கள் மற்றும் விற்பனையாளர் பெட்டியில் தீப்பிழம்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் உடனடியாக ரயில் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முற்பட்டனர். இச்சம்பவம் காலை 11 மணியளவில் துபுலியா ரயில் நிலையம் அருகிலுள்ள சாந்திநகரில் நிகழ்ந்தது. பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
ரயில் மெதுவாக சென்றபோது அதிலிருந்து ஒருசில பயணிகள் குதித்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
சாந்திநகரில் ரயில் நின்றதும் அப்பகுதி போலீசார் விரைந்து சென்று பயணிகளுக்கு உதவினர். பின், கிருஷ்ணா நகரிலிருந்து வந்த தீயணைப்பு படை தீயை அணைத்தனர். அதன்பின் பின் ரயில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.