This Article is From Jul 10, 2019

மினி பஸ்ஸுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண்… விரைந்து உதவிசெய்த மக்கள்… மனிதத்தன்மையின் உச்சம்!

மினி பஸ் விபத்தில் சிக்கிய பெண், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் தப்பித்தார். 

மினி பஸ்ஸுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண்… விரைந்து உதவிசெய்த மக்கள்… மனிதத்தன்மையின் உச்சம்!

இதைப் பார்த்த சாலையில் இருந்த மக்கள், விரைந்து யோசித்தனர்.

சீனாவில் இருக்கும் ஓர் சாலையில், மினி பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தினால் மினி பஸ்ஸுக்கு அடியில் ஒரு பெண் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக் கொண்டார். இதைப் பார்த்த சாலையில் இருந்த மக்கள், விரைந்து யோசித்தனர். எல்லோரும் ஒன்றாகக் கூடி, மினி பஸ்ஸை தூக்கியுள்ளனர். இதன் மூலம் அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிழக்கு சீனாவில் இருக்கும் சுகியான் நகரத்தில்தான் இந்த சம்பவம் கடந்த வாரம் வியாழக் கிழமை நடந்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சி.ஜி.டி.என் செய்தி நிறுவனம், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோ சீனாவில் இருக்கும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் பெண்ணுக்கு விரைந்து உதவிய மக்களை பாராட்டி பதிவுகள் இட்டு வருகின்றனர். 

சம்பவம் குறித்த வீடியோவை பாருங்கள்:

சீனாவில் இதைப் போன்று நெகிழ்ச்சி சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு, கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அப்போது அருகில் இருந்த நபர்கள், காரை புரட்டிப் போட்டு அதில் சிக்கியிருந்த ஓட்டுநரை உயிரோடு மீட்டனர். அதவும் வெகுவாக பாராட்டப்பட்டது. 

மினி பஸ் விபத்தில் சிக்கிய பெண், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் தப்பித்தார். 

Click for more trending news


.