கோவை: கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி, ஓர் பாலின ஈர்ப்புக்கு எதிராக, அரசியல் சட்ட சாசனத்தில் உள்ள 377வது பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்நிலையில், கோவை ராமாநாதபுரத்தை சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்ற கிறிஸ்துவ பாதிரியார், ஓர் பாலின ஈர்ப்புக்கு எதிராக கோவை நீதி மன்றத்தில் இன்று முழக்கங்களை எழுப்பியுள்ளார். அப்போது, “ஓர் பாலின ஈர்ப்புக்கு இடம் கொடுத்தால் இந்த நாடு முன்னேறாது. ஓரினச் சேர்க்கை பெரிய குற்றமாகும். ஓர் பாலின ஈர்ப்புக்கு ஆதரவு அளிக்காதீர்கள். இயேசு வருகிறார். அவர் உடனடியாக வருவார்.” என்று முழக்கமிட்டுள்ளார். பாதிரியாரின் கூச்சலால், கோவை நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட, 377 சட்டப் பிரிவு, இயற்கைக்கு முரணான வகையில் பாலினச் சேர்க்கையை குற்றம் என்று கூறுகிறது. இந்தச் சட்டத்தை நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து மாற்றம் செய்ய வேண்டுமா, என்பதை நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு, முன்னர் கூறப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு “சமூக பண்பாடு காலத்துக்கு காலம் மாறுபடும். வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்றவாறு சட்டமும் தன்னை மாற்றிக் கொள்ளும்” என்று கூறி 377 சட்டப் பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)