This Article is From Oct 23, 2019

புலியால் கொடூரமாக தாக்கப்பட்ட வனக் காவலர்! - காட்டிற்குள் சடலமாக மீட்பு!!

Pauri, Uttarakhand: வன அதிகாரி புனித் தோமர் கூறும்போது, ராஜேஷ் நேகி (40), ஞாயிற்றுக்கிழமையன்று இரவு மற்ற வன காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர், பணியை முடித்து திரும்பி வரும்போது, ராஜேஷை புலி ஒன்று தாக்கி காடுகளுக்கு இழுத்துச் சென்றுள்ளது என்று அவர் கூறினார்.

புலியால் கொடூரமாக தாக்கப்பட்ட வனக் காவலர்! - காட்டிற்குள் சடலமாக மீட்பு!!

ராஜேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (Representational)

Pauri, Uttarakhand:

உத்தரகண்ட் மாநிலத்தின் கலகர் வனப்பகுதியில் புலியால் கொடூரமாக தாக்கப்பட்டு, பாதி சாப்பிட்ட நிலையில், வன காவலர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கலகர் மண்டல வன அதிகாரி புனித் தோமர் கூறும்போது, ராஜேஷ் நேகி (40), ஞாயிற்றுக்கிழமையன்று இரவு மற்ற வன காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர், பணியை முடித்து திரும்பி வரும்போது, ராஜேஷை புலி ஒன்று தாக்கி காடுகளுக்கு இழுத்துச் சென்றுள்ளது என்று அவர் கூறினார். 

இதனை நேரில் கண்ட சக காவலர்கள், அந்த புலியை பயறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். எனினும், அந்த முயற்சி அவர்களுக்கு கைக்கொடுக்கவில்லை என்றார். 

மேலும், மண்டல வன அதிகாரி தகவல் படி, இந்த சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. எனினும், வன காவலர் ராஜேஷை கண்டுபிடிக்க முடியவில்லை. 

தொடர்ந்து, திங்களன்று காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது, செளகாம் வனப்பகுதி அருகே ராஜேஷின் உடல் புலியால் பாதி சாப்பிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது என தோமர் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, வனக் காவலர் ராஜேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

.