This Article is From Dec 16, 2019

நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட பாலிவுட் நடிகை பாயல் கைது

நடிகை பாயல் ரோஹத்கியின் பொருட்டு வாதிட்ட வழக்கறிஞர், “அவரின் ட்விட்டர் பதிவு சொந்த விருப்பத்திற்குரியது அல்ல. எம்.ஓ மதாயின் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது” என்று அவர் கூறினார்.

நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட பாலிவுட் நடிகை பாயல் கைது
Bundi, Rajasthan:

பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கியை ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நேரு குடும்பம் குறித்து அவதூறான கருத்தினை கொண்ட வீடியோ ஒன்றினை செப்டம்பர் 6 மற்றும் செப்டம்பர் 21ம் நாள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இண்ஸ்டாகிராமில் பதிவிட்டார். 

இதனை எதிர்த்து ராஜஸ்தான் இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் சார்மேஷ் சர்மா வழக்கு பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட பாயல் ரோஹத்கியை பூண்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலில் டிசம்பர் 24 வரை வைக்கப்பட்டார். ஐ.டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகை பாயல் ரோஹத்கியின் பொருட்டு வாதிட்ட வழக்கறிஞர், “அவரின் ட்விட்டர் பதிவு சொந்த விருப்பத்திற்குரியது அல்ல. எம்.ஓ மதாயின் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது” என்று அவர் கூறினார். 

நடிகை பாயல் தான் கைது செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் போலீஸ் தன்னை கைது செய்துள்ளதாகவும் கருத்து சுதந்திரம் என்பது ஒரு நகைச்சுவை என்று எழுதி பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார். 

.