This Article is From Dec 29, 2019

பெஜாவரா மடத்தின் பீடாதிபதி விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் காலமானார்!! அவருக்கு வயது 88!

88 வயதான பெஜாவரா மடத்தின் பீடாதிபதி விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் கடந்த டிசம்பர் 20-ம்தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பெஜாவரா மடத்தின் பீடாதிபதி விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் காலமானார்!! அவருக்கு வயது 88!

விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த டிசம்பர் 20-ம்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Bengaluru:

பெஜாவரா மடத்தின் பீடாதிபதி விஷ்வேஷா தீர்த்த சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கும் பெஷாவரா மடம் என்பது ஆஸ்த மடங்களில் ஒன்றாகும்.

பீடாதிபதியின் மரணத்திற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'நான் பலமுறை ஸ்ரீ விஷ்வேஷா தீர்த்த சுவாமிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள பலமுறை வாய்ப்புகள் பெற்றேன். இதனை நான் ஆசிர்வாதமாக கருதுகிறேன். சமீபத்தில் குரு பூர்ணிமாவின்போது அவருடன் நிகழ்ந்த சந்திப்பு முக்கியமான ஒன்று. அவரது அறிவாற்றல் எப்போதும் தன்னிகரற்றது. அவரது பிரிவால் துயரத்தில் உள்ளோருக்காக பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.


 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘கிருஷ்ண பரமாத்மா விஷ்வேஷாவின் ஆன்மாவை ஏற்றுக் கொள்ளட்டும். இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் வலிமையை பக்தர்களுக்கு கடவுள் அளிக்கட்டும் என வேண்டிக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இளைய பீடாதிபதி விஷ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள் மற்றும் அதிகாரிகள் அளித்த பேட்டியில், பீடாதிபதி விஷ்வேஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஞாயிற்றுக்கிழமையான இன்று அவரை மருத்துவமனையில் இருந்து மடத்திற்கு அழைத்துச் செல்ல நேற்று திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

மூச்சுக் கோளாறு காரணமாக பீடாதிபதி விஷ்வேஷா கடந்த 20-ம்தேதி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனைக்கு விரைந்து சென்று பீடாதிபதி விஷ்வேஷாவை பார்த்தார். முன்னாள் மத்திய  அமைச்சர் உமா பாரதி இன்று காலை உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்திற்கு வந்தார்.

மிகவும் அரிய துறவி என்று பீடாதிபதியை பாராட்டிய உமா பாரதி, அவர் மீது சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் என்று புகழாரம் சூட்டினார். ‘எனது ஆசான் ஒரு கர்ம யோகி. எல்லோரும் கர்ம யோகியாக வேண்டும் என்று அவர் எங்களுக்கு போதித்தார்' என்று உமாபாரதி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக உடுப்பியில் இருக்கும் உமா பாரதி, கடந்த 1992-ல் சன்னியாச தீட்சையைப் பெற்றார்.

With inputs from agencies

.