நாடு இருக்கும் சூழலில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் சொற்பமாகவே உள்ளன.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் போட்டித் தேர்வுகள் ஒத்தி வைப்பு
- நீட், ஜே.ஈ.ஈ. தேர்வுகள் ஜூலையில் நடைபெற வாய்ப்பில்லை என தகவல்
- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுக்கிறது மத்திய அரசு
New Delhi: கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வருவதால் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்ட நீட், JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, 'மாணவர்களின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் முக்கியத்துவம் அளிக்கிறோம். இப்போதுள்ள நிலைமையில், நீட், JEE போன்ற தேர்வுகளை நடத்த முடியாது' என்று தெரிவித்தனர்.
பல மாநிலங்களில் 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படாத சூழ்நிலை உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரப்படவுள்ளது.
இதற்கிடையே, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, நாடு முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு மற்றும் அதற்கு அடுத்த கட்டமாக நடைபெறும் நுழைவுத் தேர்வுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
12-ம் வகுப்பு தேர்வு விவகாரம் தொடர்பாக மாநில கல்வித்துறைகள் மற்றும் சி.பி.எஸ்.இ. ஆகியவை ஆலோசனை நடத்தி, தங்களது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.
முன்னதாக ஐஐடி நுழைவுத் தேர்வான JEE Mains தேர்வுகளை ஜூலை 18 - 23 ல் நடத்தி முடிக்கவும், நீட்தேர்வை ஜூலை 26ம் தேதி நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. நாடு இருக்கும் நிலையில், தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்ப 4.25 லட்சத்தை தாண்டியுள்ளது. 2.30 லட்சம்பேர் பாதிப்பிலிருந்து குணம் பெற்றுள்ளனர். 13 ஆயிரம்பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.