This Article is From Apr 28, 2020

நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்: எடப்பாடி சாடல்

காய்கறி சந்தைகளில் தனி மனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. 

Advertisement
தமிழ்நாடு Edited by

நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்: எடப்பாடி சாடல்

Highlights

  • நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்
  • காய்கறி சந்தைகளை கையாள்வதில் தான் பிரச்சினை
  • வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர்

கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 22ம் தேதி முதல் முறையாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அடுத்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை அறிவித்தார். இது ஏப்ரல் 14க்குப் பிறகு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 40 நாள் ஊரடங்கு முடிவடைய ஒருவாரம் உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார். இதில் 10 மாநில முதல்வர் மே.3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் நேற்று வரை 6வது இடத்திலிருந்த தமிழகம், இன்று 7வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1101 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்க 40 ஐ.ஏ.எஸ்அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே.3ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்புப் பணியிலுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது. காய்கறி சந்தைகளை கையாள்வதில் தான் பிரச்சினை. அதனை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். காய்கறி சந்தைகளில் தனி மனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. 

கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆரம்பக் கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக தடுக்கலாம் என்றார்.

Advertisement
Advertisement