This Article is From Feb 04, 2020

“அது வேற.. இது வேற..” குழப்பத்தில் சிக்கிய கொரோனா மதுபானம்..!

Corona Beer - கிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா தான் “கொரோனா பீர் வைரஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடாகவும் விளங்குகிறது.

Advertisement
உலகம் Edited by

Coronavirus - ‘ஃபாக்ஸ்' செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Washington DC:

Corona Beer - உலகில் தற்போது இரண்டு கொரோனாக்கள் (Corona) உள்ளன. ஒன்று உயிரைக் கொள்ளும் நோய் தொற்று (Coronavirus). அடுத்தது அதைப் பருகுபவரை போதையேற்றும் மதுபானம். ஆனால் உலகில் பலருக்கும்  இவை இரண்டிற்குமான வித்தியாசம் தெரியவில்லை என்றே கூறலாம்.  

‘ஃபாக்ஸ்' செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கூகுல் ட்ரெண்ட்ஸ் அளித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக “கொரோனா பீர் வைரஸ்” என்ற வார்த்தை அதிக முறை தேடப்பட்டுள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இருந்து கொரோனா நோய் தொற்றுக்கும், பிரபல மதுபான பிராண்டான கொரோனாவுக்கும் இடையில் மக்கள் குழப்பமடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மேலும் கிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியாதான் “கொரோனா பீர் வைரஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடாகவும் விளங்குகிறது.

Advertisement
Advertisement