This Article is From Feb 02, 2019

பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 115-ஆக உயர்வு

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 115-ஆக உயர்வு

உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

SAO PAULO:

பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது.

பிரேசில் நாட்டின் ப்ருமாடின்ஹோ நகர் அருகே கடந்த 25-ம்தேதி அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. சுமார் 3 ஆண்டுகளாக இந்த அணை பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அணை முழுவது சேறும், சகதியும் நிரம்பி காணப்பட்டது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீரும், சேறும், சகதியும் பெருக்கெடுத்து ஓடி அருகில் இருந்த சுரங்கத் தொழிற்சாலையையும், உணவகத்தையும் சூழ்ந்து கொண்டது.

வீடுகளுக்குள்ளும் சேறு, சகதி பரவியதால் நூற்றுக்கணக்கானோர் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது என பிரேசில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.