Read in English
This Article is From Nov 10, 2018

சிக்னேச்சர் பாலத்தில் டெல்லிவாசிகளின் ஆபத்தான செல்ஃபி!

டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட சிக்னேச்சர் பாலம் பல தரப்பு மக்களையும் அதை காண ஈர்த்து வருகிறது. இப்பாலத்தை காண மக்கள் கூட்டம் அதிகம் வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது

Advertisement
Delhi (with inputs from ANI)

சிக்னேச்சர் பாலத்தின் அருகே இருந்து புகைப்படம் எடுக்க அங்கு வந்த மக்கள்.

New Delhi:

டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட சிக்னேச்சர் பாலம் பல தரப்பு மக்களையும் அதை காண ஈர்த்து வருகிறது. இப்பாலத்தை காண மக்கள் கூட்டம் அதிகம் வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.  

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று சிக்னேச்சர் பாலத்தின் அருகே இருந்து புகைப்படம் எடுக்க அங்கு வந்த மக்கள் விரும்பியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமானது. செல்ஃபி எடுக்க அங்கு வந்தவர்கள் பாலத்தில் இருந்த கேபிள்களின் மேல் தொங்கியும், நகரும் கார்களில் இருந்து இறங்கியும் புகைப்படம் எடுக்க தொடங்கினர்.
 

 

பாலத்தின் கேபிள்களின் மேல் தொங்கி பலர் செல்ஃபி எடுத்தனர்.

 

நகரும் கார்களில் இருந்து இறங்கியும் புகைப்படம் எடுத்த மக்கள்.

சுற்றுலா தளமாக மாறியுள்ள சிக்னேச்சர் பாலம், வரும் நாட்களில் புகைப்படம் எடுப்பதற்காக அங்கு கண்ணாடி தளமொன்றும், செல்ஃபி எடுப்பதற்காக அங்கு தனியே இடம் ஒதுக்க உள்ளனர். ஆனால் மக்கள் அதற்காக காத்திருக்காமல் ஆபத்தான இடத்தில் இருந்து செல்ஃபி எடுப்பதால் அங்கு வரும் பயணிகளின் உயிர்களுக்கு அது பெரும் சிரமமாகியுள்ளது.

14 வருடங்களாக கட்டிட பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.

Advertisement

இப்பாலம், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் சமச்சீரற்ற கேபிள் பாலமாகும். சிக்னேச்சர் பாலத்தில் 154 மீட்டர் உயரத்தில் கண்ணாடி பெட்டகம் அமைந்துள்ளது. அங்கு பார்க்கும்போது பறவையின் பார்வையில் இருந்து நகரத்தை பார்க்கும் அனுபவம் கிடைக்கும். ஒரு சமயத்தில் 50 பேர் அமர்ந்து பார்க்கும் இந்த வசதி வரும் பிப்ரவரியில் இருந்து தொடங்க உள்ளது.

1997 ஒப்புதல் அளிக்கப்பட்ட இப்பாலம், யமுனை ஆற்றில் பள்ளிவாகனம் விழுந்து 22 குழந்தைகள் இறந்த பிறகே கட்டப்பட்டது. 1,131 கோடிக்கு மதிப்பிடபட்ட இந்த பாலம் 2010 காமன்வெல்த் வீளையாட்டுகளின் போது முடிக்க திட்டமிடபட்டது. இத்திட்டத்தின் மதிப்பு 2015-ல் 1,594 கோடியாக உயர்ந்த நிலையில் 2017 டிசம்பரில் கட்டிட பணி நிறைவேற்றப்பட்டது.

Advertisement
Advertisement