This Article is From Aug 20, 2019

திருவான்மியூரில் நீல நிறத்தில் மின்னிய கடல் அலைகள்: ஆச்சரியத்துடன் ரசித்த பொதுமக்கள்!

திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட பொதுமக்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்​ந்தனர்.

திருவான்மியூரில் நீல நிறத்தில் மின்னிய கடல் அலைகள்: ஆச்சரியத்துடன் ரசித்த பொதுமக்கள்!

திருவான்மியூரில் நீல நிறத்தில் மின்னிய கடல் அலைகள்.

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

சென்னை மக்களின் முக்கிய பொழுதுப்போக்கு இடமாக கடற்கரைகள் விளங்குகின்றன. வார இறுதி நாட்களில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில், நேற்றைய தினம், திருவான்மியூர் கடற்கரையில், வழக்கம் போல் மக்கள் கூட்டம் நிரம்பியிருத்தது. 

இந்நிலையில், நேற்று இரவு திடீரென கடல் நீல நிறத்தில் மாறி காட்சியளித்தது. இரவு நேரத்தில் கடல் அலை நீல நிறத்தில் மாறி மின்னுவதை பார்த்து பொதுமக்கள் அதிசயித்தனர். ஒளிரும் கடல் அலை குறித்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நள்ளிரவில் கடற்கரைக்கு படையெடுத்தனர். 

தொடர்ந்து, திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட பொதுமக்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்​ந்தனர். 

திருவான்மியூர் மட்டுமின்றி ஈச்சம்பாக்கம், பெசன்ட் நகர் பகுதிகளிலும் கடல் நிறம் மாறி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடலில் சேர்ந்த கழிவுகளில் இருந்து நைட்ரஜன் கலந்த பொருட்களினால் இந்த ஒளி வெளியாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

.