This Article is From Sep 20, 2018

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் விரைந்து கையெழுத்திட வேண்டும்: அற்புதம்மாள் வலியுறுத்தல்

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைந்து கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் விரைந்து கையெழுத்திட வேண்டும்: அற்புதம்மாள் வலியுறுத்தல்

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் விரைந்து கையெழுத்திட வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைந்து கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள் ள பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. அந்தப் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது யாராலும் தாங்கிகொள்ள முடியாத மிகப்பெரிய துயரம்தான். அது நடந்திருக்க கூடாது, ஆனால் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் உண்மையான குற்றவாளிகளை நோக்கி உங்கள் விசாரணை சென்றதா என கேள்வி எழுப்பி யதால் பாதிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக தற்போது சிறையில் இருப்பது என் மகன் தான்.

இதனால் நாங்கள் இழந்தது தான் அதிகம். இருந்தாலும் நியாயம் கிடைக்க வேண்டும், மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என சட்டரீதியாக போராடுகிறோம். பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரியில்தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா என்பது இன்னும் நிரூபணம் ஆகவில்லை என அனைவரும் கூறுகின்றனர்.செய்யாத குற்றத்திற்காக 28 ஆண்டுகளாக பேரிழப்பை சந்தித்துள்ளோம்.

எனவே பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைந்து கையெழுத்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

.