This Article is From Jul 17, 2020

கோவையில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசி அவமதிப்பு; கொதித்த தமிழக அமைச்சர்!!

இன்று காலை பெய்த மழையால் பெரியார் சிலை மீது பூசப்பட்டிருந்த காவிச் சாயம் அகன்றது.

கோவையில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசி அவமதிப்பு; கொதித்த தமிழக அமைச்சர்!!

இன்று காலை இது குறித்த செய்தி வேகமாக பரவியது.

ஹைலைட்ஸ்

  • கோவை, சுந்தராபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது
  • இன்று காலை இது குறித்தான செய்தி தெரிய வந்தது
  • சம்பவ இடத்தில் திக, திமுகவினர் கூடினர்

கோயம்புத்தூரின் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு அடையாளம் தெரியாதவர்களால், ஆள் அரவமற்ற நேரத்தில் இப்படி பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை இது குறித்த செய்தி வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள திராவிடர் கழகத்தினர், திமுக மற்றும் மதிமுகவினர், பெரியார் சிலைக்கு அருகில் கூடினர். அவர்கள் காவிச் சாயம் பூசியவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த போலீஸ் அவர்களை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியது. 

இன்று காலை பெய்த மழையால் பெரியார் சிலை மீது பூசப்பட்டிருந்த காவிச் சாயம் அகன்றது. மீதமிருந்த காவிச் சாயத்தை கூடியிருந்த தொண்டர்கள் சுத்தப்படுத்தினர். 

இச்சம்பம் பற்றி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “இது ஒரு ஈனச் செயல். இப்படிப்பட்ட செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கறாரான நடவடிக்கைப் பாயும். இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு அனைத்து தலைவர்களும் பின்பற்றப்படுவதற்கு உரிமையுண்டு. தங்கள் எதிர்ப்பைக் காட்ட வன்முறையை யாரும் கையில் எடுக்கக் கூடாது,” என்று எச்சரிக்கை விடுத்தார். 


 

.