This Article is From May 01, 2019

மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

Maoist Attack in Gadchiroli Updates: மகாராஷ்டிரா கட்சிரோலி பகுதியில் போலீஸ் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் குண்டுவீசியதில், 15 பாதுகாப்பு படையினர் மற்றும் ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளனர்.

Maoist Attack in Gadchiroli: பிரதமர் மோடி இழிவான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

New Delhi:

மகாராஷ்டிராவின் கட்சிரோலி(Gadchiroli attack) பகுதியில்(Maoist Attack In Maharashtra) பாதுகாப்புபடையினர் மீதான மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

கட்சிரோலியில் 15 பேர் கொண்ட பாதுகாப்புப்படையினர் குழு ஒன்று போலீஸ் வாகனத்தில் சென்ற போது, அவர்களை குறி வைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய 15 பாதுகாப்புப்படை வீரர்களும் ஒரு ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நிறுவன தினம் இன்ற கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இன்று காலை, சாலை கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 25 வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அதைத்தொடர்ந்து, இந்த தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, மகாராஷ்டிரா காட்சிரோலியில் நடந்த இழிவான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

தாக்குதலில் மரணித்த அனைவருக்கும் வீர வணக்கம். வீரர்களின் உயிர் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இழிவான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.