This Article is From Dec 17, 2019

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு தண்டனை!

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்கு தண்டனை!

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

2007ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பில்  பாகிஸ்தான் பெஷாவார் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. 

76 வயதாகும் முஷாரப் மீதான தேச துரோக வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்ற அமர்வு விசாரித்தது. ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த முஷாரப் 2007- ம் ஆண்டு அதிபாரக இருந்த போது அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு எதிராக 2013ம் ஆண்டு தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. 

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பால் இந்த வழக்கு தொடங்கப்பட்டது. இந்த வழக்கு 2013 முதல் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் துபாய் மருத்துவமனையில் முஷாரப் சிகிச்சை எடுத்து வருகிறார். 

தேசத்துரோக வழக்கில் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் முஷாரப்பின் அறிக்கையை பதிவு செய்யும்படி லாகூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, துபாயில் வசித்து வரும் முஷாரப், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அவர் இல்லாத நிலையில் அவரது விசாரணையை நிறுத்தி வைக்க முயன்றார்.

மேலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் அளவுக்கு ஆரோக்கியமாகும் வரை சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு லாகூர் உயர் நீதிமன்றத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

.