This Article is From Jun 05, 2018

சென்னை மருந்து தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக பொங்கும் பீட்டா!

குதிரைகள் மற்றும் பல மிருகங்களை சென்னையைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் துன்புறுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது

சென்னை மருந்து தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக பொங்கும் பீட்டா!

ஹைலைட்ஸ்

  • மிருகங்கள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா தெரிவித்துள்ளது
  • சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் பீட்டா புகார் தெரிவித்துள்ளது
  • சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், பீட்டாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது

குதிரைகள் மற்றும் பல மிருகங்களை சென்னையைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் துன்புறுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.

இது குறித்து பீட்டா, `சென்னையை மையமாக வைத்து செயல்படும் மெடிக்லோன் பயோடெக் நிறுவனத்தில் ஆன்டி-டாக்சின்ஸ் தயாரிக்கப்படுகிறது. இது அங்குள்ள மிருகங்ககளை வைத்து தான் செய்யப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்பட்ட மிருகங்களுக்கு தோல் சம்பந்தப்பட நோய் வந்துள்ளது, மேலும் பல வியாதிகளால் அந்த மிருகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. சில மிருகங்கள், தங்களது மலத்தை சாப்பிடும் அவலமும் நடந்து வருகிறது. இது குறித்து சுற்றுச்சூழல், வன அமைச்சகங்களுக்கு புகார் கொடுத்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளது.

மேலும் பீட்டா, `அரசு, கடந்த 2017 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31 ஆம் தேதி, மிருகங்களை வைத்து மெடிக்லோன் நிறுவனம் நடத்தி வரும் இந்தச் சோதனைகளுக்குத் தடை வதித்தது. விலங்குகள் நல வாரியம் 2015 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வை அடுத்து அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால், தொடர்ந்து மெடிக்லோன் நிறுவனம் மிருகங்களை வைத்து சோதனை நடத்தி வருகிறது. அங்கு அவதிப்பட்டு வரும் மிருகங்களை மீட்க வேண்டும்' என்ற தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மெடிக்லோன் நிறுவனம், `இந்த குற்றச்சாட்டுகள் எங்கள் நிறுவனத்தை மூட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செய்யப்பட்டு உள்ளது. பீட்டா அமைப்பு, இதைப் போன்ற நிறைய புகார்களை மற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் செய்துள்ளது' என்று மட்டும் தெரிவித்துள்ளது.

 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.