This Article is From Jan 02, 2019

திருவாரூர் இடைத் தேர்தல் நடத்துவதில் சிக்கல்..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்த தொகுதியான திருவாரூர், காலியாக இருப்பதால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

திருவாரூர் இடைத் தேர்தல் நடத்துவதில் சிக்கல்..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்த தொகுதியான திருவாரூர், காலியாக இருப்பதால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை ஜனவரி 3 ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். அந்த தேதி முதலே, வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கப்படும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு 28 ஆம் தேதி நடக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர், ‘சமீபத்தில் திருவாரூரை கஜா புயல் சூறையாடியது. இதனால், பலரின் வாக்காளர் அட்டை சேதமடைந்தும், தொலைந்தும் விட்டன. இந்த நேரத்தில் தேர்தல் வைத்தால், பலர் தங்களது ஓட்டைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இடைத் தேர்தல் தேதி தள்ளிவைக்க உத்தரவிடப்பட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

அவசர வழக்காக எடுத்து இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முன்னர் கூறப்பட்டிருந்தது. அதை நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தகது.

.