This Article is From Dec 12, 2019

அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்ய கோரும் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தீர்ப்பு வழங்கப்பட்டபோது அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இதன்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்ய கோரும் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அயோத்தி வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நவம்பர் 9-ம்தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது.

ஹைலைட்ஸ்

  • ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதியளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது
  • தீர்ப்பில் தெளிவு வேண்டும் என்று கோரி ஒரு தரப்பினர் மனுத்தாக்கல்
  • 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என தகவல்
New Delhi:

உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிற்கு எண் 10 வழங்கப்பட்டுள்ளது. இதனை 5 பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்யும் என்றும், வழக்கம்போல திறந்தவெளி நீதிமன்றத்தில் நடைபெறாமல் அறையில் வைத்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம், நிர்மோகி அகோரா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதேபோன்று சுமார் 40 அமைப்புகள் மறு ஆய்வு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அமைதியை சீர்குலைப்பதற்காக இந்த மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள மனுதாரர்கள் அமைதி என்பது நீதிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 

முஸ்லிம் மனுதாரர்கள், இந்த வழக்கு விவகாரத்தில் அமைதியையே விரும்புவதாகவும், ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவர், 'சட்டவிரோதமான முறையில் இடித்தது, அத்துமீறி சர்ச்சைக்குரிய இடத்திற்குள் நுழைந்தது, மசூதியை சேதப்படுத்தி அதனை இடித்தது உள்ளிட்ட குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்குத் தொடர்ந்தவர்களில் ஒருவரான நிர்மோகி அகாரா, 'உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் எங்களுக்கு தெளிவு வேண்டும். கோயில் கட்டுவதற்கு குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய தெளிவான விளக்கம் தேவை' என்று கூறியுள்ளது. 

கடந்த நவம்பர் 9-ம்தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமானது வழக்குத் தொடர்ந்த ராம்லல்லாவுக்கு செல்ல வேண்டும் என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முஸ்லிம் தரப்புக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக வழங்க வேண்டும். 

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்திற்கு முன்னால், கட்டிடம் ஒன்று இருந்ததாக தொல்லியில் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் அது கோயில்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை. 1,045 பக்கம் உள்ள அயோத்தி தீர்ப்பில், முஸ்லிம்கள் பக்கம் வலுவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'இரு தரப்பு விவாதங்கள், எடுத்து வைக்கப்பட்டட ஆதாரங்களின் அடிப்படையில் இந்துக்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களும், ஆதாரங்களும் முஸ்லிம் தரப்பை விட வலுவானதாக இருந்தது' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

.