This Article is From Apr 11, 2019

பர்தா அணிந்து வருபவர்களை சோதனையிட வேண்டும்: பாஜக வேட்பாளர் சர்ச்சை கருத்து!

முசாபர்நகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 16 லட்சம் வாக்காளர்களில் 5 லட்சம் பேர் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தொகுதியில், பாஜகவின் சஞ்சீவ் பல்யான் மற்றும் அஜீத் சிங் உள்ளிட்ட இரண்டு பெரும் புள்ளிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

பர்தா அணிந்து வருபவர்களை சோதனையிட வேண்டும்: பாஜக வேட்பாளர் சர்ச்சை கருத்து!

மத்திய அமைச்சரும், முசாபர்நகர் பாஜக வேட்பாளருமான சஞ்சீவ் பல்யான்

ஹைலைட்ஸ்

  • "Faces of women in burqa not checked," said BJP lawmaker Sanjeev Balyan
  • Alleging "fake" voting, he said he'll demand re-poll if it is not checked
  • Communally-sensitive Muzaffarnagar has around 5 lakh Muslim voters
Muzaffarnagar:

மேற்கு உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரின் பாஜக வேட்பாளரான சஞ்சீவ் பல்யான் தங்கள் பகுதியில் "போலி வாக்குப்பதிவு" நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாநிலங்களிலும், 2 இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது.

அந்த வகையில், ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆந்திரா பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரின் பாஜக வேட்பாளரான சஞ்சீவ் பல்யான் இன்று காலை வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் தொகுதியில் 'போலி வாக்குப்பதிவு' நடைபெறுகிறது. பர்தா அணிந்து வரும் பெண்களை சோதனை செய்வதில்லை. தொடர்ந்து பர்தா அணிந்து வருபவர்களை சோதனை செய்யவில்லை என்றால் மறுதேர்தலுக்கு கோரிக்கை விடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஆந்திராவில், வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

முசாபர்நகர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 16 லட்சம் வாக்காளர்களில் 5 லட்சம் பேர் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 11 லட்சம் மக்களும் இந்து மற்றும் ஜாட் சமூகம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்,

இப்படி மிகவும் முக்கிய தொகுதியான முசாபர்நகரில், பாஜகவின் சஞ்சீவ் பல்யான் மற்றும் மாயாவதி மற்றும் அகிலேஷூடன் கூட்டணி வைத்துள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் அஜீத் சிங் உள்ளிட்ட இரண்டு பெரும் புள்ளிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் சஞ்சீவ் பல்யான் தற்போது மத்திய அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முசாபர்நகர் தொகுதியில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கூட்டணி கட்சிகளுக்காக காங்கிரஸ் விட்டுக்கொடுத்த 7 தொகுதிகளில் முசாபர்நகரும் ஒன்றாகும்.

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிளில், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், மாயாவதி கட்சி 38 தொகுதிகளிலும், அஜித் சிங் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதில், மேற்கு உத்தரபிரதேசத்தின் 7 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

(With inputs from ANI and PTI)

.