Read in English বাংলায় পড়ুন
This Article is From Apr 11, 2019

மக்களவைத் தேர்தல் 2019: சில சம்பவங்களை தவிர, முதற்கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது: தேர்தல் ஆணையம் #Liveupdates

2019 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

Advertisement
இந்தியா Edited by ,

இன்று 18 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.

New Delhi:

2019 மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு இன்று நடக்கிறது. 91 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கிறது. மத்திய அமைச்சர்களான நிதின் கட்காரி (நாக்பூர்), கிரேன் ரிஜிஜு (அருணாச்சல் மேற்கு), ஜெனரல் விகே.சிங் (கசியாபாத்), சத்யபால் சிங் (பாக்பாத்), மகேஷ் சர்மா (கவுதம் புத்தா நகர்) ஆகியோர் இன்று வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள்

ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திர்புரா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சத்தீஸ்கர், உத்திரகண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குபதிவு நடக்கவிருக்கிறது.

உத்திர பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளில் முதல் கட்டமாக 8 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில் முக்கிய தொகுதிகள் சகரண்பூர், கைரானா, கசியாபாத், பாக்பாத் மற்றும் கவுதம் புத்தா நகர் ஆகும். பாஜக, காங்கிரஸ், மாயாவதி – அகிலேஷ் யாதவ் – அஜித் சிங் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

Apr 11, 2019 19:41 (IST)
முதற்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம்.
Apr 11, 2019 17:32 (IST)
மிசோரமில் இளம் வாக்களர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

Apr 11, 2019 17:31 (IST)
ஜனநாயகத் திருவிழாவில் வாக்களிக்க வந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி. அருகில் அவருடைய மகன். 

 (படம்: அருணாச்சல பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி)

Apr 11, 2019 13:26 (IST)
மகாராஷ்டிராவில் உள்ள வாக்குச்சாவடி அருகில் வெடி விபத்து..!

மாவோயிஸ்ட்டுகள் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதியான காட்சிரோலியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட தகவல்படி, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apr 11, 2019 12:02 (IST)
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட உள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இன்று பூஜையில் ஈடுபட்டார். 5வது கட்ட மக்களவைத் தேர்தலின்போது, அமேதியில் வாக்குப்பதிவு நடக்கும்.

Advertisement
Apr 11, 2019 12:01 (IST)
ஆந்திர பிரதேச புலிவெண்டுலாவில் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்த பின்னர், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் பெரும்பாலும் தொங்கு நாடாளுமன்றம் அமையவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும் அவர், 'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் எந்த ஒரு கட்சியுடனும், தலைவர்களுடனும் கூட்டணி அமைக்கவோ, ஆதரவு அளிக்கவோ தயாராக உள்ளேன். மாற்றத்திற்காக வாக்களியுங்கள். துணிச்சலுடன் வாக்களியுங்கள்' என்றுள்ளார்.

Apr 11, 2019 11:17 (IST)
காலை 9 மணி வரையிலான பதிவான வாக்கு சதவிகித நிலவரத்தை, தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. 

 à®…சாம் - 10.2% 

 à®¤à¯‡à®œà¯à®ªà¯‚ர்- 10% 

 à®¨à®¾à®•à®¾à®²à®¾à®¨à¯à®¤à¯- 21% 

 à®šà®¿à®•à¯à®•à®¿à®®à¯- 32% 

 à®µà¯†à®³à®¿ மணிப்பூர்- 16%
Apr 11, 2019 11:17 (IST)

பஸ்தரில் நக்சல் தாக்குதல்: 

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாநிலத்தில் இருக்கும் மஸ்தரில், இன்று நக்சல் அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Apr 11, 2019 11:12 (IST)
சத்தீஸ்கரின் தான்டேவாடாவில் சில நாட்களுக்கு முன்னர்  மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியபோதும் இன்று அந்தப் பகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். தான்டேவாடாவின் ஷியாம்கிரியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மக்கள். 

Apr 11, 2019 10:33 (IST)

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தனது வாக்கை பதிவு செய்தார். அவர் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

2014 ஆம் ஆண்டு 10 லட்சம் வாக்குகளில் ஆறு லட்சம் வாக்குகளை நிதின் பெற்றார். 
Apr 11, 2019 10:25 (IST)
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதரபாத் தொகுதியின் வேட்பாளருமான அசாத்துடின் ஒவாய்சி, தன் வாக்கினை பதிவு செய்தார். அவர் மூன்று முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
Apr 11, 2019 10:21 (IST)
Apr 11, 2019 10:13 (IST)
Apr 11, 2019 09:49 (IST)
Apr 11, 2019 09:48 (IST)
காலை 9 மணி வரை நாகாலாந்து தொகுதியில் 21 சதவிகிதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Apr 11, 2019 09:30 (IST)

மத்திய அமைசாரும் கசியாபாத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான விகே சிங் இன்று காலை வாக்களித்தார். ராஜ் நகரிலுள்ள ஸ்கில்லர் பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் விகே சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.

முக்கிய வேட்பாளர்கள் : கசியாபாத் தொகுதியில் பாஜக கட்சியின் விகே சிங், சமஜ்வாதி கட்சி கூட்டணி சார்பாக சுரேஷ் பன்சால், காங்கிரஸ் கட்சியின் டோலி சர்மா இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
Apr 11, 2019 09:15 (IST)

முக்கிய வேட்பாளர்கள் : பாக்பாத் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் சத்யா பால் சிங் மற்றும் ராஷ்திய லோக் டால் தலைவரான ஜெயந்த சவுதாரி இடையே போட்டி நிலவுகிறது. 

2014 ஆம் ஆண்டு ஜெயந்த் சவுதாரியின் தந்தையான அஜித் சிங்கை இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சத்ய பால் சிங் வென்றார். 
Apr 11, 2019 09:08 (IST)

முக்கிய வேட்பாளர்கள் : பாஜக கட்சியின் சஞ்ஜீவ் பல்யாண் ராஷ்திரிய லோக் டால் கட்சியின் அஜித் சிங் எதிராக போட்டியிடுகிறார். 

2014 தேர்தலில் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பல்யாண் வெற்றி பெற்றார்.
Apr 11, 2019 09:03 (IST)
ஜம்மூ மற்றும் பரமுலா மக்களவை தொகுதிகளில் தேர்தல் அமைதியான முரையில் நடைப்பெறுகிறது. 

ஜம்மூவின் கிராமபுறங்களான ஆர்.எஸ்.புரா, சுச்சித்கார்க், சம்பா மற்றும் நவுவ்சேரா ஆகிய இடங்களில் வக்களிக்க மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.



Advertisement