This Article is From Aug 25, 2020

ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 Vaccine: இந்தியாவில் முக்கிய சோதனையை இன்று தொடங்குகிறது!

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மத்திய அரசு தரப்பு, கொரோனா தடுப்பு மருந்திற்கான 2வது மற்றும் 3வது நிலை மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது. 

ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 Vaccine: இந்தியாவில் முக்கிய சோதனையை இன்று தொடங்குகிறது!

இந்த சோதனைகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 நபர்கள் பங்கெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • ஆக்ஸ்போர்டு மருந்து, இங்கிலாந்தில் 2 கட்ட சோதனையை முடித்துள்ளது
  • இந்தியாவில் 2ம் கட்ட சோதனையை ஆரம்பிக்கிறது
  • இந்தியாவில் பல இடங்களில் சோதனை செய்யப்பட உள்ளது
New Delhi:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்து, இந்தியாவில் தனது 2வது நிலை மனிதர்கள் மீதான மருத்துவப் பரிசோதனையை இன்று தொடங்குகிறது. புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII) நிறுவனம், இந்தியாவில் சோதனையை செய்ய உள்ளது. 

“Covishield” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து, நாட்டில் ஆரோக்கியமாக உள்ள தனி நபர்கள் மீது சோதனை செய்யப்படும். புனேவில் உள்ள பாரதி வித்யாபீத் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அதற்கான சோதனையை எஸ்ஐஐ ஆரம்பிக்கிறது. 

எஸ்ஐஐ நிறுவனம், பிரிட்டிஷ் - ஸ்வீடிஷ் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆஸ்டிராஜெனகாவுடன் கூட்டு சேர்ந்து கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த மருந்தானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

“எங்களுக்கு நாட்டில் சோதனை செய்வதற்கான அனைத்துவித ஒப்புதல்களும் கிடைத்துவிட்டன. ஆகஸ்ட் 25 முதல் புனேவில் மனிதர்கள் மீதான பரிசோதனையை நாங்கள் ஆரம்பிக்க உள்ளோம். 

இந்த சோதனையின் மூலம் உலகத்தரம் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்தை நாட்டு குடிமக்களுக்கு எங்களால் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று கூறுகிறார் எஸ்ஐஐ நிறுவனத்தின் பிரகாஷ் குமார் சிங். 

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மத்திய அரசு தரப்பு, கொரோனா தடுப்பு மருந்திற்கான 2வது மற்றும் 3வது நிலை மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது. 

இந்த சோதனைகளானது டெல்லியில் உள்ள எய்ம்ஸ், பி ஜே மருத்துவ கல்லூரி புனே, ஆர்எம்ஆர்ஐஎம்எஸ் பாட்னா, ஜோத்பூர் எய்ம்ஸ், கோராக்பூரில் உள்ள நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா மருத்துவ கல்லூரி, மைசூரில் உள்ள ஜேஎஸ்எஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் என்று எஸ்ஐஐ உளவட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. 

இந்த சோதனைகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 நபர்கள் பங்கெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் இங்கிலாந்தில், முதல் இரண்டு கட்ட சோதனைகளில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தானது, நோயை எதிர்த்துப் போராடும் தன்மையுடையது என முடிவுகள் வந்தன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.