பெய்ட்டி புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் 50 ரயில்களின் இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக விஜயவாடாவில் இருந்து கடலோர ஆந்திரப் பகுதிக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் - குன்டூர் சிம்ஹாத்ரி விரைவு ரயில், குன்டூர் - விசாகப்பட்டினம் சிம்ஹாரி விரைவு ரயில், விசாகப்பட்டினம் - விஜயவாடா ரட்னாசலம் விரவு ரயில், விஜயவாடா - விசாகப்பட்டினம் ரத்னாச்சலம் விரைவு ரயில் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டவைகளில் சில ரயில்கள்.
இதேபோன்று விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, குன்டூர், பிமாவரம் ஆகிய பயணிகள் ரயில்களின் இயக்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்களை பொறுத்தவரையில், விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி, காக்கிநாடா, தெனாலி, பிமாவரம், குன்டூர், மசூலிப்பட்டினம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காக்கிநாடா துறைமுகம் - கோட்பள்ளி டீசல் யூனிட் பயணிகள் ரயில், கோட்பள்ளி - காக்கிநாடா துறைமுகம், மசூலிப்பட்டினம் - குடிவாடா பிமாவரம் - ராஜமுந்திரி ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தெற்கு மத்திய ரயில்வேயின் பொது மேலாளர் வினோத் குமார் யாதவ், எமர்ஜென்சி நிலைமைகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காக தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.