Tiananmen Square: இவரது 'டேன்க் மேன்' புகைப்படம் 1990 உலக பத்திரிகை புகைப்பட விருதை பெற்றது
ஹைலைட்ஸ்
- புகைப்படக் கலைஞரான சார்லி கோல் 64 வயதில் காலமானார்
- இவரது 'டேன்க் மேன்' 1990 உலக பத்திரிகை புகைப்பட விருதை பெற்றது
- 'டேன்க் மேன்' 20ஆம் நூற்றாண்டை விவரிக்கும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது
Jakarta, Indonesia: ஒரு ஒற்றை மனிதர், வரிசையாக அனிவகுத்துவரும் பீரங்கிகளை இடைமறித்து நிற்பது போன்ற ஒரு புகைப்படம் - தியனன்மென் சதுக்கம் 'டேன்க் மேன்' (Tiananmen Square 'Tank Man') என்று அழைக்கப்படும், சீனாவின் தியனன்மென் சதுக்கம் படுகொலை சம்பவத்தை ஆவணப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் இந்தோனேசியாவில் காலமானார். இந்த செய்தியை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகள் இந்த 64 வயது புகைப்படக் கலைஞரான சார்லி கோல் (Charlie Cole) பாலியில் இயற்கை எய்தினார் என்பதை உறுதி செய்தனர். டெக்சாஸை சேர்ந்த இவர், நீண்ட காலமாக இங்குதான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'அவரது குடும்பத்தின் இந்த மிகப்பெரிய இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்' என்று ஒரு மாநில துறை அதிகாரி AFP-யிடம் தெரிவித்துள்ளார்.
1989-ல் பெய்ஜிங்கின் மத்தியில் நூற்றுக்கணக்கான ஜனநாயகப் புரட்சியாளர்களை கொன்ற அடுத்த நாளில், பெய்ஜிங் நகரின் சாலைகளில் அணிவகுத்து வந்த பீரங்கிகளை, ஒரு வெள்ளை சட்டை அணிந்த நபர், இரண்டு கைகளிலும் ஷாப்பிங் பேக்களை ஏந்திக்கொண்டு இடைமறித்த காட்சிகளின் இவரது புகைப்படங்கள் 1990ஆம் ஆண்டு உலக பத்திரிகை புகைப்பட விருதை பெற்றது.
யார் என்று அறியப்படாத இந்த நபர், அந்த சாலையில் வந்த பீரங்கிகள் மற்றும் ஆயுதம் நிறைந்த வாகனங்களை வழிமறித்த பின்னர், அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பீரங்கியின்மீது ஏறி, அதில் இருந்த குழுவுடன் உரையாடலில் ஈடுபட்டார்.
இந்த "டேன்க் மேன்" புகைப்படம் 20ஆம் நூற்றாண்டை விவரிக்கும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது, ஆனால் படத்தின் தணிக்கை மற்றும் சீனாவில் இருந்த பரந்த ஒடுக்குமுறை காரணமாக இந்த படம் சீனாவில் பெரும்பாலும் அடையாளம் காணப்படவில்லை.
அன்றைய நாளில், இந்த டேன்க் மேனின் தனிப்பட்ட புகைப்படங்களை தங்கள் கேமரா மூலம் பல புகைப்பட கலைஞர்கள் எடுக்க முயற்சித்தனர். அவற்றில் ஒரு பெய்ஜிங் உணவகத்திலிருந்து, ஜெஃப் வைடனர் (Jeff Widener) எடுத்த புகைப்படம் புலிட்சர் பரிசுக்கு (Pulitzer Prize) பரிந்துறைக்கப்பட்டது.