Assembly Elections 2019: மும்பையில் வாக்களித்த பாலிவுட் நட்சத்திரங்கள்
Updated: October 21, 2019 11:04 IST
பாலிவுட் நட்சத்திரங்கள் இன்று வாக்களித்தனர். நடிகர்கள் அமீர்கான், ரவிகிஷன், லாரா தத்தா, மாதுரி தீட்சித், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் முதலில் வாக்களித்தனர். ஹரியானாவில் மல்யுத்த வீரர் பபிதா போகாட், பாஜக வேட்பாளராக போட்டியிடும் சார்க்கி தாத்ரி ஆகியோர் வாக்களித்தனர்.
பாந்த்ரா (மேற்கு) வாக்குச் சாவடியில் வாக்களித்த நடிகை மாதுரி தீட்சித்
பாந்த்ரா வாக்குச் சாவடியில் வாக்களித்தார் நடிகர் அமீர்கான். "மகாராஷ்டிராவின் அனைத்து குடிமக்களும் வெளியே வந்து அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
லத்தூரில் ஒரு வாக்குச் சாவடியில் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி ஜெனிலியா டிசோசா
முன்னாள் டென்னிஷ் வீரர் மகேஷ் பூபதி மற்றும் அவரின் மனைவி நடிகை லாரா தத்தா.
கோரக்பூர் நகரைச் சேர்ந்த நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகர் அமீர்கானின் மனைவியும் கிரன் ராவ் வாக்களித்தார்.
சர்கி தாத்ரி தொகுதியில் மல்யுத்த வீரங்கணை பபிதா போகாட்.
நடிகை தியா மிர்சா வாக்களித்த பின்னர் ட்வீட் செய்துள்ளார்.