பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சாலை மார்க்கமாக 90 நிமிடங்கள் பிரசாரம் மேற்கொண்டார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்த அவர், வழியெங்கும் கூடியிருக்கும் மக்களை பார்த்து கையசைத்தப்படி சென்றார். அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மோடி, மோடி என குரல் எழுப்பினர். அவர் பயணம் செய்த 6 கி.மீ தூரம் முழுவதும் மக்கள் சாலையின் இரண்டு பக்கமும் குவிந்து நின்றனர். மேலும், அவர்கள் மோடியின் முகமூடி அணிந்து, மலர் தூவி வரவேற்றனர்.
இந்த சாலை மார்க்க பயணமானது, ஏர்போர்ட் ஸ்கொயர், கேபிட்டல் மருத்துவமனை ஸ்கொயர், கங்கா நகர் ஸ்கொயர், சிட்டி பெண்கள் கல்லூரி, ouat ஸ்கொயர், ஸ்ரீப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி வெள்ளை நிற குர்தா அணிந்தும், கழுத்தில் காவி நிற ஸ்கார்ப் அணிந்தும் காணப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்.15 விமான நிலையம் முதல் ஜனதா மைதான் வரை பேரணி சென்ற பிரதமர் மோடி, தற்போது, மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சாலைகளின் இரு பக்கமும் கொடியசைத்து மக்கள் உற்சாகத்துடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இல்லாத்தை தாண்டி பிரதமர் மோடியின் வாகனம் சென்றது.