மக்களவைத் தேர்தல் 2019: லக்னோவில் பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
Updated: March 05, 2019 09:05 IST
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது தேர்தல் பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார். அரசியலில் அறிமுகமான இரண்டாவது வாரத்திலே பிரியங்கா அதிரடி காட்டி வருகிறார். சாலை மார்கமாக நடந்த இந்த பிரசாரத்தில் பிரியங்காவுடன் அவரது சகோதர்ரும், காங்கிரஸ் தலைவருமான ராகுலும் பங்கேற்றார்.
47 வயதான பிரியங்கா காந்தி, அமோதி தொகுதியில் பலமுறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர், முதல்முறையாக தனது சகோதரருடன் லக்னோவில் பிரசாரம் மேற்கொண்டார்.
கிழக்கு உத்தரப்பிரதேச பொறுப்பாளாராக பிரியங்காவும், மேற்கு உத்தரபிரதேச பொறுப்பாளாராக ஜோதிராதித்யா சிந்தியாவையும் ராகுல் காந்தி நியமித்துள்ளார்
மக்களவை தேர்தலுக்காக பிரியங்கா மற்றும் சிந்தியாவும் தேர்தல் பணியில் ஈடுபடுவர். இதைத்தொடர்ந்து, சட்டசபை தேர்தலுக்கும் பிரசாரம் மேற்கொள்வர். உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என ராகுல்காந்தி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ரஃபேல் ஊழலை குறிப்பிட்டு பொம்மை விமானத்தை பறக்க விட்டப்படி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை உத்தரபிரதேசத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் நம்புகிறது. உத்தரபிரதேசமே அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் ஆகும். கடந்த 2014 தேர்தலில் 80ல் 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
போஸ்டர்களும், பேனர்களும் இந்திரா காந்தியை நினைவு படுத்துவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து புதிய அரசியலை கொண்டு வருவோம். இந்த அரசியலில் நீங்கள் அனைவருமே முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருக்க வேண்டும் என பிரியங்கா கட்சியின் சக்தி மொபைல் ஆப்பில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
கிழக்கு உத்தரபிரதேசத்திலே பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அமைந்துள்ளது. இதேபோல், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோராக்பூர் தொகுதியும் அங்கு உள்ளது. அலகாபாத் பகுதியே நேருவின் சொந்த தொகுதியாகும்.
பச்சை நிற சுடிதார் அணிந்து, கைகளை பாதி மடக்கி விட்டபடி, மேளங்கள் முழங்க, தொண்டர்களின் உற்சாக வரவேற்பில், கைகளை உயர்த்தி காட்டியபடியே பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார்.
2014ல் காங்கிரஸ் அமோதி மற்றும் ரேபேலியில் மட்டுமே கவனம் செலுத்தியது. 21க்கு 5 தொகுதியிலே வெற்றி பெற்றது.
பிரசார வாகனத்தை சுற்றிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போதே டீ இடைவெளிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அப்போது பழைய சினிமா அரங்கம் அருகே வந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள் வாகனத்தை சூழந்தனர்.