பிரதமர் நரேந்திர மோடியின் லோக்சபா தேர்தல் பிரசாரம்: படங்கள்
Updated: March 05, 2019 22:34 IST
எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி முழு வீச்சில் தயாராகி வருகிறது. அவர்கள் இந்த முறையும் இளம் வாக்காளர்களை குறி வைத்துள்ளனர். இளைஞர்களுக்கு அவசியமான வேலை வாய்ப்பு குறித்து அவர்கள் அதிகம் பேசி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு 15 கோடி பேர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். பாஜக, ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர்கள் மிகவும் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 26, 2019 அன்று ராஜஸ்தான் சுருவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி. எல்லையைத் தாண்டி பாகிஸ்தானிலிருந்த தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்திய பிறகு பிரதமர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. அப்போது அவர், ‘நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளன. நாட்டை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன்' என்று பேசினார்.
மார்ச் 1, 2019 அன்று கன்னியாகுமரியில் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியின் போது விங் கமாண்டர் அபிநந்தனின் வீரம் குறித்து பேசினார் பிரதமர். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது, அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தார்.
மார்ச் 3, 2019 அன்று பாட்னா காந்தி மைதானத்தில் ‘சங்கல்ப் பிரசாரத்தில்' கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அவருடன் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இருந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி, காங்கிரஸை சரமாரியாக விமர்சித்தார்.
மார்ச் 3, 2019 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது ஆதரவாளர்களுக்கு கையசைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனிருந்தன
குஜராத்தின் ஜாம்நகரில், மார்ச் 4, 2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். அப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.