மாநில காவல் துறை நேர்மையான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லாததால் சி பி ஐ விசாரிக்க வேண்டும்
New Delhi:
தூத்துக்குடி போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டை தொடர்ந்து சி பி ஐ விசாரணை நடைபெற வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் போது நல வழக்குப் போடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிற்கு இவ்வழக்கை வக்கில் ஜி எஸ் மணி தாக்கல் செய்துள்ளார்
மேலும் துப்பாக்கி சூட்டிற்கு காரணமாய் இருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு வழங்கப்படும் என்னும் கூறிய 10 லட்ச இழப்பீடு தொகை போதாது எனவும், 50 லட்ச இழப்பீடு தொகையும், தீவிர காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு 25 லட்ச இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநில காவல் துறை நேர்மையான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லாததால் சி பி ஐ விசாரிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலயத்தை எதிர்த்து போராடியதில் இதுவரை 13 பேர் காவலர்களால் கொல்லப்பட்டார்கள், மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.