உச்ச நீதிமன்றத்தின் விசாகா வழக்கில் வழிகாட்டியுள்ளபடி, தமிழக அரசின் அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களிலும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக கமிட்டி அமைக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து மனுதாரர் தரப்பில், ‘1997, ஆகஸ்ட் 13 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், வேலை செய்யும் இடங்களிலும், பிற நிறுவனங்களிலும் பாலியல் தொந்தரவுகளை தவிர்க்கும் நோக்கில் 12 கட்ட விதிமுறைகளை வகுத்தது. இதை சம்பந்தப்பட்ட துறையோ, நிறுவனங்களோ செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அப்படியொரு கமிட்டியும் உருவாக்கப்படவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு, மீண்டும் அமல்படுத்துவது அவசியம் என்று கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் தமிழக காவல் துறையைச் சேர்ந்த பெண் எஸ்.பி ஒருவர், உயர் அதிகாரி மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்துதான், காவல் துறையிலேயே விசாரணை கமிட்டி ஒன்று ஆகஸ்ட் 17, 2018-ல் உருவாக்கப்பட்டது. காவல் துறையிலேயே இந்த நிலைதான் நீடிக்கிறது. இந்த விஷயத்தில் மாநிலம் முழுவதும் மிக மோசமான நிலையே இருந்து வருகிறது’ என்றார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)