This Article is From Jul 14, 2019

கர்த்தார்பூர் வழித்தடம்: இந்தியா -பாக் பேச்சுவார்த்தை

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் 'தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் சாகிப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் அமைந்துள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூரை இணைக்கவுள்ளது

New Delhi:

கர்த்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வாகா எல்லையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், ,இந்திய உள்துறை அமைச்சக சார்பாக அனில் மாலிக் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தலைமையில் நடைபெறவுள்ளது.

கர்த்தார்பூர் வழித்தடம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முன் மொழியப்பட்ட எல்லை போக்குவரத்து திட்டமாகும். இந்தியாவிலிருக்கும் சீக்கிய மக்களின் வசதிக்காக பாகிஸ்தனைன் கர்தாபூருக்கு சாலை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டப்படி இந்தியாவின் பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் சாகிப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் அமைந்துள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூர் ஆகிய சீக்கிய ஆலயங்களை இணைக்கும் வகையில் வழித்தடம் முடிவு செய்யப்பட்டது. 

அனைத்து கால நிலையிலும் பயணம் நடைபெறுவதற்கு ஏற்றவகையில் பாலம் அமைக்கப்பட்டுவருகிறது.

இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இந்தியாவில் பாலம் கட்டுவதுபோல் பாகிஸ்தானிலும் கட்ட வலியுறுத்தி வருகிறோம். இது பயணிகளின் பாதுகாப்பை வழங்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கர்த்தார்பூர் நடைபாதை ஆற்றின் வெள்ள வரக்கூடிய பகுதிகளில் கட்டப்பட்டு வருவதால் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. பஞ்சாபின் குர்தாஸ்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

நெடுஞ்சாலைப் பணிகள் செப்டம்பர் 30-ம் தேதியிலும் தள வேலைகள் அக்டோபர் 31-ம் தேதியிலும் நடைபெறும் என்று அவர் கூறினார்.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் 'தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. கர்த்தார்பூருக்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள சாலை அமைக்க இந்தியாவின் குருதாஸ்பூரையும் கர்தார்பூரையும் இணைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இருநாட்டு பகுதிகளிலும் அடிக்கல் நாட்டப்பட்டது.

.