மூத்த அதிகாரி மீதான பாலியல் புகாரை தொடர்ந்து அவர் விசாரணையில் உள்ளார்.
New Delhi: ஏர் இந்தியாவின் மூத்த கமாண்டர் ஒருவர் மீது பெண் விமானி பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும், ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறும்போது, பெண் விமானி அளித்துள்ள புகாரில் மூத்த கமாண்டர் அந்த பெண்ணிடம் தவறான கேள்விகளை கேட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், கடந்த மே.5 ஆம் தேதி ஹைதராபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த பெண் விமானியை மூத்த கமாண்டர் இரவு உணவருந்த அழைத்தார். நான் அவருடன் சில விமானங்களை இயக்கியுள்ளேன், அவர் கண்ணியமானவராக தோன்றியதால், அவருடன் உணவருந்த சம்மதம் தெரிவித்தேன்.
நாங்கள் இருவரும், சுமார் 8 மணி அளவில் ஒரு உணவகத்திற்கு சென்றோம்... அங்கு தான் எனது துன்பம் தொடங்கியது என்று அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.
அவர் தனது மண வாழ்க்கையில் மகிழ்ச்சியற்று இருப்பதாகவும், அதனால் கடுமையாக மனச்சோர்வடைந்து இருப்பதாகவும் கூற தொடங்கியவர், என்னிடம் எப்படி கணவரை விட்டு இருக்கிறீர்கள் என்று என்னிடம் தகாத கேள்விகளை கேட்க தொடங்கினார். ஒரு கட்டத்தில், இது பற்றி நான் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டேன் என்று அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.