This Article is From Aug 08, 2020

கேரள விமான விபத்து: உயிரிழந்த கேப்டன் இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்

கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த விபாத்தானது, சுமார் 7:40 மணி அளவில் நடந்துள்ளது. 

விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட டிவி சேனல்களின் காணொலிக் காட்சிகளைப் பார்க்கும்போது, விமானம் இரண்டாக பிளந்துள்ளது தெரிகிறது. 

ஹைலைட்ஸ்

  • இன்று இரவு 7:40 அளவில் விபத்து நடந்துள்ளது
  • கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது
  • விபத்தில் இரு விமானிகளும் உயிரிழந்துள்ளனர்
New Delhi:

துபாயிலிருந்து கேரளாவுக்கு 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ரன்வே பகுதியிலிருந்து வழக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. கோழிக்கோடு விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் விமானம் தரையிறங்கியுள்ளது. 

IX 1344 என்ற எண் கொண்ட அந்த விமானத்தின் இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது. விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 50 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர். 

உயிரிழந்த இரு பைலட்களில் ஒருவர் விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே ஆவார். அவர் ஏர் இந்தியாவில் பணிக்குச் சேர்வதற்கு முன்னர், இந்திய விமானப் படையில் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. 

இது குறித்து ஒரு அதிகாரி, “தீபக் வசந்த் சாதே, மிகவும் தொழில் நேர்த்தி வாய்ந்தவர். அவருக்கு 58 என்டிஏ தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் சோதனை பைலட்டாக இருந்தவர் அவர்” என்கிறார். 

வசந்த் சாதே, விமானப் படை ஆகாடமியில், மிகுந்த திறன் வாய்ந்த போர் விமானியாக செயல்பட்டவர் என்று ட்விட்டரில் ஒருவர் தகவல் கூறுகிறார். 

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியை ஏர் இந்தியா நிறுவனம், ‘வந்தே பாரத்' என்னும் பெயரில் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. 

விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட டிவி சேனல்களின் காணொலிக் காட்சிகளைப் பார்க்கும்போது, விமானம் இரண்டாக பிளந்துள்ளது தெரிகிறது. 

கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த விபாத்தானது, சுமார் 7:40 மணி அளவில் நடந்துள்ளது. 

விமானங்கள் தொடர்பான FlightRadar24 என்னும் இணையதளம், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் பல முறை வட்டமடித்துள்ளது. இரு முறை தரையிறங்க முயன்றுள்ளது' என்கிற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறது. 

.