ஹைலைட்ஸ்
- பெங்களுர் விமான ஓடுதளத்தில் இரண்டு விமானிகள் பலி
- விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
- விசாரணையை தொடங்க உத்திரவு பிரபிக்கப்படவுள்ளது.
Bengaluru: பெங்களூரில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ராணுவ விமானத்தில் சென்ற இரு முதன்மை விமானிகள் பலியாகினர்.
ஏமலூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடடுக்கு சொந்தமான ஓடுதளத்தில் மிராஜ் 2000 ரக விமானத்தில் பயணித்த விமானிகள், விமானத்தில் இருந்து வெளியேறியதால் பரிதாபமாக உயிர் இழந்தார். இறந்த விமானிகளை ஸ்குடிரன் லீடர் சாமீர் ஏமரோல் மற்றும் ஸ்குடிரன் லீடர் சித்தார்த் நோகீ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சரியாக காலை 10.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தேரியதாக தகவல் வெளியாகியுள்ளது. மிராஜ் 2000 விமானம் பொருத்தவரை ‘ஜிரோ ஜிரோ' எனப்படும் (ஜிரோ வேகம் மற்றும் ஜிரோ உயரம்) வெளியோரும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் விமானம் தரையில் நிற்கும்போதோ அல்லது அனைத்து இருந்தாலோ விமானியால் வெளியேற முடியும்.
மேலும் விமான் ஓடுபாதையில் பறக்க தாயாராக இருக்கும்போது எப்படி வெளியேறினார்கள் என்பது இன்னும் மாயமாகவே உள்ளது. இந்த அசம்பாவிதத்தை குறித்து விசாரணைக்கு உத்திரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்னாடக மாநிலத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் நிறுவனம், ராணுவ விமானங்களுக்கான உபகர்ணகளை வழங்கி அப்டேட் செய்வது வழக்கம். இந்நிறுவனமே பெங்களூரில் இருக்கும் விமான தளத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களில் சுமார் 50 விமானங்களை இந்திய விமான படை பயன்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.