This Article is From Nov 27, 2018

தரையிறங்குவதை மறந்து தூங்கிய ஆஸ்திரேலிய விமானி!

நவம்பர் 8ம் தேதி, பைபெர் பிஏ 31 விமானத்தை ஓட்டிய விமானி தனது அரையில் தூங்கியுள்ளார்.

தரையிறங்குவதை மறந்து தூங்கிய ஆஸ்திரேலிய விமானி!

"விமானி பின்னர் எப்படி தூக்கத்திலிருந்து எழுந்தார், எப்படி தரையிறக்கினார்" என்ற தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 

Canberra:

ஆஸ்திரேலியாவின் டேவன்போர்ட் பகுதியிலிருந்து கிங் தீவுக்கு பறந்த ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்காமல், தொடர்ந்து பறந்துள்ளது. இந்த விமானத்தில் இருந்த ஒரே நபர் விமானி மட்டுமே. பைபெர் பிஏ 31 விமானத்தை ஓட்டிய விமானி தனது அரையில் தூங்கியுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து விசாரிக்கப்படும் என்று ஆஸ்திரேலியே போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. "விமானி பின்னர் எப்படி தூக்கத்திலிருந்து எழுந்தார், எப்படி தரையிறக்கினார்" என்ற தகவல்களை ஆஸ்திரேலிய விண்வெளி போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 

விமானி கிங் தீவில் இற‌ங்குவதற்கு பதிலாக 46 கிமீ தூரம் பறந்து சென்றுள்ளார். 46 கிமீ தூரமும் தூங்கியபடியே சென்றுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆஸ்திரேலியே போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விமானி தனியாக அழைத்து விசாரிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் விமான விபத்தில் கிங் தீவு அருகே 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.