Read in English
This Article is From Jun 28, 2018

மும்பை விமான விபத்து : பெரும் உயிர் சேதத்தை தவிர்த்த பெண் பைலட்

விமான விபத்து விசாரனை ஆணையம் நடைப்பெற்ற விபத்து குறித்த காரணங்களை கண்டறிய முழு விசாரனையில் இறங்கி உள்ளது

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • ஜூஹூ விமான தளத்தில் இருந்த கிளம்பிய சோதனை விமானம் விபத்துக்குள்ளானது
  • விபத்தான விமானம் இருபது வருட பழமையானது
  • விமான ஓட்டுனரின் சாதுர்யத்தால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது
Mumbai:

மும்பை : மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்த பீச்கிராப்ட் சி 90 ரக விமானம் கட்டிடங்களில் மோதுவதை தவிர்த்த விமானத்தின் பைலட் பல உயிர்களை காப்பாற்றியுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூஹூ விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு விமான ஓட்டுனர்கள், இரண்டு பராமரிப்பு பொறியாளர்களுடன் சோதனை ஓட்டத்திற்காக விமானம் கிளம்பியது. மதியம் 1.30 மணியளவில், விமானம் செயலிழந்தது விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேரும், தரையில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்துனர்
 

 

கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகில் விமானம் மோதியுள்ளது. விமானத்தை இயக்கிய பெண் விமான ஓட்டுனர், மக்கள் வசிக்கும் கட்டிடங்களின் மீது மோதாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக விமானத்தை இயக்கி பல உயிர்களை காத்துள்ளார் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்க்த்தில் பதிவிட்டிருந்தார்.

12 இருக்கைகளை கொண்ட விபத்துக்குள்ளான விமானம், 20 வருடமாக இயங்கி கொண்டிருந்தது. சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு வீரர் கூறியதாவது, "கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 1.15 மணி அளவில் தகவல் வந்தது. உடனடி மீட்பு பணிக்களுக்காக நான்கு தீயணைப்பு வண்டிகள், தண்ணீர் லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம்." என்றார்

"விமான விபத்து விசாரனை ஆணையம் நடைப்பெற்ற விபத்து குறித்த காரணங்களை கண்டறிய முழு விசாரனையில் இறங்கி உள்ளது" என்று, பயணிகள் விமானத் துறை பொது இயக்குனர் புலார் கூறினார்.

Advertisement