Read in English বাংলায় পড়ুন
This Article is From Jan 03, 2019

‘2 பெண்களுக்கும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை!’- பினராயி தகவல்

நேற்று பெண்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு, ஆலயத்தைப் 'புனிதப்படுத்த' மூடப்பட்டது.

Advertisement
இந்தியா ,

கேரளாவின் பல்வேறு இடங்களில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் பந்திற்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

Thiruvananthapuram:

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்ததை அடுத்து, முதன்முறையாக 2 பெண்கள் நேற்று கோயிலுக்குள் சென்றனர். 

இள வயதுப் பெண்கள் கோயிலுக்குள் சென்றதை அடுத்து, கேரளாவில் உள்ள வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரள தலைநகரமான திருவனந்தபுரத்தில் பெருந்திராளானோர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவே, போலீஸ் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தண்ணீர் பாய்ச்சியும் விரட்டியடித்தனர். 

இந்நிலையில் பெண்கள் கோயிலுக்குள் சென்றது குறித்து பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘நேற்று ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், பக்தர்கள் அந்த இரு பெண்களுக்கும் உதவி செய்தனர். ஆனால், இதை வைத்து சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து வன்முறை செய்து வருகின்றனர். 

இந்த வன்முறைகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைத் தவிர வேறு வழியில்லை. உச்ச நீதிமன்றம் கொடுத்தத் தீர்ப்பைத்தான் கேரள அரசு மதித்து நடந்து வருகிறது. இன்று மாநிலத்தில் நடக்கும் போராட்டங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரானது' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

இன்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் பந்திற்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

நேற்று பெண்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு, ஆலயத்தைப் 'புனிதப்படுத்த' மூடப்பட்டது.
 

Advertisement
Advertisement