This Article is From Feb 02, 2019

‘’விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது’’ – பியூஷ்கோயல் பேட்டி

மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

New Delhi:

விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ரூ. 6 ஆயிரம் முதல்கட்டமாக வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். என்.டி.டி.வி.-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை 3 தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 17 மட்டும் வழங்குவதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் என்.டி.டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது-

விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அளிக்கிறோம் என்றால் அது அவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதைக்காக இந்த தொகையை வழங்குகிறோம். இது முதல்கட்ட நடவடிக்கைதான். நிரந்தர தீர்வு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

.