Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 29, 2018

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாயம்- 189 பேரின் நிலை என்ன?

Indonesia Lion Air Flight Crash:இந்தோனேசியா தலைநகரமான ஜகார்த்தாவிலிருந்து இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாயமானது

Advertisement
உலகம்

Lion Air Crash:விமானம் புறப்பட்டு 13 நிமிடங்களில் மாயமாகியுள்ளது

Highlights

  • விமானத்தில் மொத்தம் 188 பேர் இருந்தனர்
  • ஜாவா தீவு அருகில் விமானம் விபத்தாகி இருப்பதாக நம்பப்படுகிறது
  • மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
Jakarta:

இந்தோனேசியா தலைநகரமான ஜகார்த்தாவிலிருந்து இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாயமானது. ஜாவா தீவுகளுக்குப் பக்கத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கும் நம்பப்படுகிறது. விமானத்தில் 189 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர், ‘விமானம் ஜேடி610, புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமானது. விமானம் விபத்துக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

ஜாவா தீவுகளுக்கு அருகே விமானத்தின் பாகங்கள் கிடைத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணி அதிகாரி முகமது யவுகி, ‘விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், யாரேனும் உயிர் பிழைத்தார்களா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. நாங்கள் உயிரோடு இருப்பார்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

விமான விபத்துக்குக் காரணம் என்னவென்று தற்சமயம் சொல்ல முடியாது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement