বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 27, 2019

கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் விபத்து!

கஜகஸ்தானில் அல்மேட்டி விமானநிலையம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

இந்த விமானம் மத்திய ஆசிய நாட்டின் தலைநகரான நூர்-சுல்தான் நோக்கிச் சென்றுள்ளது.

கஜகஸ்தானில் அல்மேட்டி விமான நிலையம் அருகே 95 பயனிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில், குறைந்தது ஏழு பேர் வரை உயிரிழந்துள்ளதாக மத்திய ஆசிய நாட்டின் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானத்திலிருந்த மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம் மத்திய ஆசிய நாட்டின் தலைநகரான நூர்-சுல்தான் நோக்கிச் சென்றுள்ளது.

இந்த விபத்து குறித்து கஜகஸ்தான் சிவில் விமானக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் புறப்படும் போதே அதன் கட்டுபாட்டை இழந்துள்ளது. இதையடுத்து விமானம் ஒரு கான்கிரீட் வேலியை உடைத்து, ஒரு சிறிய கட்டிடத்தில் மோதியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement