This Article is From Jul 22, 2020

சென்னையில் செயல்பாட்டிற்கு வந்தது பிளாஸ்மா வங்கி!

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.80 லட்சத்தினை கடந்துள்ளது.

சென்னையில் செயல்பாட்டிற்கு வந்தது பிளாஸ்மா வங்கி!

ஹைலைட்ஸ்

  • இங்கு ஒரே நேரத்தில் ஏழு பேர் பிலாஸ்மா தானம் செய்ய முடியும். 
  • நாடு முழுவதும் 12 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது
  • தமிழகத்தில் இதுவரை 2,626 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதில் முதன் முறையாக சதன்பிரபாகரன் எம்.எல்.ஏ பிளாஸ்மா தானத்தை செய்துள்ளார். இங்கு ஒரே நேரத்தில் ஏழு பேர் பிளாஸ்மா தானம் செய்ய முடியும். மேலும், பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.80 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறையை டெல்லி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகமும் பிளாஸ்மா சிகிச்சை முறையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் பிளாஸ்மா வங்கி உருவாக்கப்பட்டு இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகின்றது.

.