கிரேஸி மோகன் தமிழ் திரையுலகில் வசன கர்த்தாவாகவும் நகைச்சுவை நடிகராகவும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். நாடக உலகிலும் தன் நகைச்சுவை நாடகங்களினால் புகழ் பெற்றவர். நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்களை திணிக்காமல் கிரேஸி மோகனின் வசனங்கள் நம்மை சிரிக்க வைக்கக் கூடியது.
நகைச்சுவை நாடங்களை சின்னத்திரையிலும் பார்க்க முடியும். அவருக்கு வயது 67. இன்று மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு. மேலும்,ஆஹா, காதலா காதலா, நான் ஈ. ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவருடைய இழப்பு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் அவரை நகைச்சுவை ஞானி என்று கூறி புகழ்ந்துள்ளார். கிரேஸி மோகனின் ஒரு அற்புதமான கூட்டுக் குடும்பம் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது
கமல்ஹாசன் ட்விடை கீழே பார்க்கலாம்
இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்
என்று கூறியிருந்தார்.