பென் பர்வில் என்கிற மருத்துவம் கடலுக்கு அடியில் சென்று கடல் சீல்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
இங்கிலாந்தி நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்ட நபருக்கு அங்கிருந்த கடல் சீல் ஒன்று கை கொடுக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
பென் பர்வில் என்கிற மருத்துவம் கடலுக்கு அடியில் சென்று கடல் சீல்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். அப்போது அவரை நோக்கி வந்த வெளிர் கருப்பு நிற கடல் சீல் ஒன்று, அவரின் கையைப் பற்றியுள்ளது. தொடர்ந்து அவரிடம் அது கை கொடுத்து விளையாடியுள்ளது.
“மிருகங்களை தொடுவதில் சிக்கல் இருப்பதாக நினைக்கு நபர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். கடல் சீல் நீருக்கு அடியில் இருக்கும் போது தான் தொடுபவற்று குறித்து 100 சதவிகித கட்டுப்பாட்டோடு இருக்கும்” என்று கூறி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் பர்வில்.
பென் பர்வில் படந்த 20 ஆண்டுகளாக இந்த க்ரே சீல்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கடல் சீல்களை தொடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லும் பர்வில், “மற்ற ஆழ்கடல் டைவர்கள் சீல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவைகளுக்கு மிகவும் சக்திவாய்ந்த தாடை பகுதி மற்றும் கூர்மையான பற்கள் இருக்கும்” என்று எச்சரிக்கிறார்.
Click for more
trending news