Read in English
This Article is From Sep 25, 2018

"கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளிடம் காங்கிரஸ் கெஞ்சுகிறது” பிரதமர் மோடி விமர்சனம்

பாஜக தலைவர் அமித்ஷா (Amit Shah), மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Advertisement
இந்தியா
Bhopal:

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச (Madhya Pradesh) மாநிலம் போபாலில் நடைப்பெற்ற பாஜக (BJP) கூட்டத்தில் பிரதமர் மோடி (Narendra Modi) கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

“கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளிடம் காங்கிரஸ் (Congress) கெஞ்சுகிறது. காங்கிரஸ் உள்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தோல்வி அடைந்தது, எனவே இந்தியாவிற்கு வெளியே கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறது.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“பாஜக மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், பாஜக தலைவர் அமித்ஷா (Amit Shah), மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement
Advertisement