This Article is From Apr 26, 2019

வாரணாசியில் மோடி இன்று பிரமாண்ட பேரணி, நாளை வேட்பு மனு தாக்கல்!

Modi Road Show In Varanasi: பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாயிலில் இருந்து பிரமாண்ட பேரணியை தொடங்குகிறார். அங்கிருந்து, பழங்கால கோயில்கள் மற்றும் கோட்டைகள் வழியாக சென்று இறுதியாக தசஸ்வமேத்தில் பேரணி முடிவடைகிறது

வாரணாசியில் மோடி இன்று பிரமாண்ட பேரணி, நாளை வேட்பு மனு தாக்கல்!

PM Modi Varanasi Roadshow: வாரணாசியில் மிக பரபலமான நபராக இருந்து வருகிறார் மோடி.

Varanasi:

Modi in Varanas: வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாராணசியில் களமிறக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. உலகின் புனிதமான இடங்களில் ஒன்றாக இருக்கும் வாரணாசியில், பிரியங்கா காந்தியும் போட்டியிட்டால் நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் இந்த தொகுதியை நோக்கி காணப்படும்.

இன்று பிற்பகல் வாரணாசியை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாயிலில் இருந்து பிரமாண்ட பேரணியை (PM Modi Roadshow in Varanasi) தொடங்குகிறார். அங்கிருந்து, பழங்கால கோயில்கள் மற்றும் கோட்டைகள் வழியாக சென்று இறுதியாக தசஸ்வமேத்தில் பேரணி முடிவடைகிறது.

இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதையடுத்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபாடு நடத்துகிறார். இதன்பின்னர் வாராணசி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் மோடி, நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக நாளை பாஜக தொண்டர்கள் மத்தியிலான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசவுள்ளார். இந்த இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்திலும் மோடியுடன் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் உடன் இருக்க உள்ளனர்.

வாரணாசியில் மிக பரபலமான நபராக இருந்து வரும் மோடி, அங்கு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலைகளை அகலப்படுத்துவது, உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். இந்த திட்டத்தால், நூற்றாண்டு காலமாக இருந்து வரும் பழங்கால வீடுகள், கோவில்கள் இடிக்கப்பட உள்ளன.

அதேநேரத்தில், வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க 50 சதவீத வாய்ப்புள்ளதாக அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். தீவிர அரசியலுக்கு வருகை தந்த பிரியங்காவின் முதல் தேர்தல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவரது தாயார் சோனியா காந்தி யோசித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் வெற்றி, தோல்வி என்பதை தான் பொருட்படுத்த போவதில்லை என பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : பிரதமர் மோடியுடன் அக்ஷய்குமார் நடத்திய நேர்காணல் - 10 ஹைலைட்ஸ்!

.