பீகாரில் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு பிஎம் கேர்ஸில் இருந்து நிதி அளிப்பு!
New Delhi: பீகாரில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் நிதியளிக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா கவனிப்பை மேம்படுத்துவதில் நீண்ட முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில், "பி.ஆர்-கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட்டில் இருந்து, பீகாரில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்னாவின் பிஹ்தாவில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இன்று திறக்கப்படும் என்றும், முசாபர்பூரில் உள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் விரைவில் திறக்கப்படும் என்றும் தொடர் ட்வீட்டுகளில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனைகளில் 125 ஐ.சி.யூ படுக்கைகள் வென்டிலேட்டர்கள் மற்றும் 375 சாதாரண படுக்கைகள் உள்ளன, மேலும் ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்ஸிஜன் சப்ளை உள்ளது.
மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஆயுதப்படை மருத்துவ சேவைகளால் வழங்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகார், அதிக எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகள் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும்.
ஆகஸ்ட் 11ம் தேதி நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில், பீகார் உட்பட 10 மாநிலங்கள் நாட்டின் கொரோனா பாதிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார், மேலும் இந்த மாநிலங்களில் வைரஸ் தோற்கடிக்கப்பட்டால், நாடு தொற்றுநோய்க்கு எதிரான அதன் போராட்டத்தில் வெற்றி பெற்றதாகும் என்று கூறியிருந்தார்.