This Article is From Jun 21, 2019

அனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் விருந்தளித்த மோடி: மாயாவதி, லாலு கட்சியினர் புறக்கணிப்பு!

750க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி எம்.பிக்களும் விருந்தில் பங்கேற்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. எனினும், லாலு பிரசாத் யாதவ், மாயவதி கட்சியினர் விருந்தை புறக்கணித்தனர்.

அனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் விருந்தளித்த மோடி: மாயாவதி, லாலு கட்சியினர் புறக்கணிப்பு!

அசோக் ஹோட்டலில் எம்.பிக்களுக்கு விருந்தளித்தார் மோடி.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி சார்பில், மக்களவை மற்றும் மாநிலங்களைவையை சேர்ந்த சுமார் 750 எம்.பிக்களுக்கு நேற்றிரவு விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பங்கேற்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது.

எனினும், இந்த விருந்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது.

டெல்லியில் உள்ள அசோக் நட்சத்திர ஹோட்டலில் இந்த விருந்து நிகழ்ந்துள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக கனிமொழி, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், பாஜகவில் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பிக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

2elmjdkg

இந்த விருந்தில் பங்கேற்காதது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் மிசா பாரதி கூறும்போது, பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக இதுவரை 118 குழந்தைகள் உயிரிழந்ததற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், விருந்தில் பங்கேற்கவில்லை.

இதுபோன்ற விருந்திற்கு செய்யும் செலவுகளை குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவு செய்யலாம். இந்த விருந்திற்கு ஆகும் செலவில், மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் வாங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விருந்தில் எம்.பிக்கள் அனைவரும் சகஜமாக பிரதமருடன் உரையாடி, செல்பிக்கள் எடுத்து மகிழ்ந்த விதமாக அமைந்தது என பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.

With inputs from agencies

.