This Article is From Apr 03, 2019

மேற்குவங்கத்தில் இன்று ஒரேநாளில் தேர்தல் பரப்புரையை துவங்கும் மோடி - மம்தா!

8 லட்சத்திற்கும் அதிகாமான மக்கள் திரள்வார்கள் என பாஜக எதிர்ப்பார்க்கிறது.. ஏனெனில், கடந்த ஜனவரியில் மம்தா தலைமையில், மகாகத்பந்தன்' கூட்டணியின் முதல் கூட்டம் இதே பரிகேட் பரேட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

மேற்குவங்கத்தில் இன்று ஒரேநாளில் தேர்தல் பரப்புரையை துவங்கும் மோடி - மம்தா!

அம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளை இலக்காக கொண்டுள்ளது.

Kolkata:

பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்கத்தில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார். இதில் இன்று ஒரே நாளில் இரண்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். முதலில் மேற்குவங்கம் சிலிகுரியில், மற்றொன்று கொல்கத்தா பரிகேட் மைதானத்திலும் நடைபெறுகிறது.

8 லட்சத்திற்கும் அதிகாமான மக்கள் திரள்வார்கள் என பாஜக எதிர்ப்பார்க்கிறது.. ஏனெனில், கடந்த ஜனவரியில் மம்தா தலைமையில், மகாகத்பந்தன்' கூட்டணியின் முதல் கூட்டம் இதே பரிகேட் பரேட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில், பாஜக 20 தொகுதிகளை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. மேற்குவங்கத்தில் பாஜக இதுவரை வென்றது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மம்தா பானர்ஜி தனது தேர்தல் பரப்புரையை ஏப்.4 முதல் துவங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்றே அவரும் தனது பரப்புரையை துவங்குகிறார். மோடி பரப்புரை மேற்கொள்ள உள்ள சிலிகுரியில் 170 கிமீ தொலைவில் உள்ள கோச் பேகர் பகுதியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறும்போது, மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு முன்னதாக பேசினாலும் சரி, அவர் பேசிய பின்பு பேசினாலும் சரி எதுவும் எடுபடாது. அவர் மோடியை கண்டு அஞ்சுகிறார். மோடி பேசினால் மக்கள் அவரது தொண்டர்களாக மாறிவிடுவார்கள் என கவலை கொண்டுள்ளார் மம்தா என்றார்.

மேலும் படிக்க''70 ஆண்டுகளில் செய்யாத வேலையை 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி செய்யும்?'' - மோடி கேள்வி

.