हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 25, 2019

மோடி, அமித் ஷாவுக்கு குறிவைக்கும் தீவிரவாதிகள்! உளவுத்துறை எச்சரிக்கை!!

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தீவிரவாதிகள் குறி வைத்திருக்கும் முக்கிய புள்ளிகள் பட்டியலில் உள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் உயிர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு பதிலடியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. 

குறிப்பாக நாட்டின் முக்கிய 30 நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தலை விமானப்படையும் உறுதி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

நாட்டில் எமர்ஜென்சியின்போது விதிக்கப்படும் எச்சரிக்கையும் கட்டுப்பாடும்தான் முதன்மை அலெர்ட்டாக கருதப்படும். இதற்கு அடுத்தபடியாக ஆரஞ்ச் அலெர்ட் உள்ளது. இந்த அலெர்ட் முக்கிய நகரங்கள், ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளங்கள், பதான்கோட், அவந்திபோரா, ஜம்மு, ஹிந்தோன் உள்ளிட்ட இடங்களில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பழிவாங்கும் முனைப்பில் பாகிஸ்தானும், அந்நாட்டு தீவிரவாதிகளும் உள்ளனர். அந்நாட்டை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக்குழு தாக்குதலை நடத்த வாய்ப்பிருக்கிறது. 

Advertisement

கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக அங்கு ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Advertisement