Read in English
This Article is From Sep 05, 2019

ரஷ்யாவின் ‘ஃபார் ஈஸ்ட்’ வளர்ச்சிக்கு இந்தியா 1 பில்லியன் டாலர் உதவி!

விலாடிவோஸ்டாக்கில் நடந்த 5வது கிழக்கு பொருளாதார ஃபோரமில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

இந்திய அரசு தரப்பு, ரஷ்யாவின் ‘ஃபார் ஈஸ்ட்' (தூர கிழக்கு) பகுதிகளுக்கான வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் நிதியுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, வெளியிட்டார். 

விலாடிவோஸ்டாக்கில் நடந்த 5வது கிழக்கு பொருளாதார ஃபோரமில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் மேலும், “எனது தலைமையிலான அரசாங்கம், கிழக்கு ஆசியாவில் இருக்கும் தேசங்களுடன் ‘ஆக்ட் ஈஸ்ட்' என்கிற கொள்கையின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் மூலம் ‘ஆக்ட் ஃபார் ஈஸ்ட் பாலிசி'-யில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

எங்கள் நாட்டின் பொருளாதார வெளியுறவு விவகாரத்திலும் இந்த அறிவிப்பு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். நட்புடன் இருக்கும் பல தேசங்களின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றிடும்” என்று பேசினார். 

கிழக்கு பொருளாதார ஃபோரம் என்பது, ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் வியாபாரம் வளரவும் முதலீடுகள் அதிகரிக்கவும் நடத்தப்படும் நிகழ்ச்சி.
 

Advertisement
Advertisement